புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்டிபி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜனாதிபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தானம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும் இந்த சமஸ்தானத்தின் பல புகழுக்கு உரித்தானவர் திவான் கலிபுல்லா எனவும் புதுக்கோட்டையின் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியான திருவள்ளுவர் நகர் கல்லிப் நகர் டிவிஎஸ் கார்னர் பகுதியில் திவான் கலிபுல்லாவிற்கு நினைவுத்தூண் அமைப்பதற்கான சரியான இடம் டிவிஎஸ் ரவுண்டான எனவும் அதில் அவருக்கு நினைவுத்தூண் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.