அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24 ஆவது ஆண்டு பேரவை கூட்டம்.
அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 24வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி சேப்பெருமாள், தலைமை வகித்தார்.அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எம். செல்வராஜ்,கே கற்பகவள்ளி ,ம. மகேந்திரன்,எம் ஆனந்தி,ஜோ துர்கா,சி ஆதிலட்சுமி,பி தமிழரசி,பிசி தர்மராஜ்,ஆர் திருமலை, சி. சிவானந்தம்,எஸ் ஆரோக்கியநாதன்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சி டபிள்யூ எஃப் ஐ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி. கிருஷ்ணமூர்த்தி,சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி, சிஐடியூ மாவட்ட தலைவர் த.சகுந்தலா, சிஐடியூ மாவட்ட பொருளாளர் ஆர் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வீடு கட்டும் திட்டத்தில் ஆய்வு முடித்த மனுக்களுக்கு உடனடியாக பண பயன்கள் வழங்கிட வேண்டும்.

நலவாரிய கூட்டத்தில் முடிவு செய்தபடி அடிப்படையில் உடனடியாக ரூபாய் 2000 பென்ஷன் வழங்க வேண்டும்,தீபாவளி பண்டிகை காலப்போனஸ் தொகையாக ரூ 5000 ஒரு மாத காலத்திற்குள் வழங்கிட வேண்டும்,பணி புரியும் இடத்தில் நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் கைகால் எலும்பு முறிவு க்கும் ரத்த காயங்களுக்கும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெற ரூபாய் இரண்டு லட்சம் வழங்கிட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையாக ரூபாய் 3000 55 வயதில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

முன்னதாக அரியலூர் அண்ணா சிலையிலிருந்து ,அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்ற கோரிக்கைகள் முழக்க பேரணி நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.தனம்,ஆர் ராதா கிருஷ்ணன்,எஸ் தங்கம்,எம் அர்ஜுனன்,எம் சேகர், கோ முத்துச்செல்வி,ஜி செல்வம்,எம் கொளஞ்சி,ஜி விஜயா,மாரியப்பன்,பழனிச்சாமி, குந்தபுரம் பாண்டியன்,எம் சித்ரா,ஏழேரி சின்னதுரை,ஆர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.