கேரளாவில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தின் 75 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக எல்லையில் உள்ள குமுளியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஜிப்புகளில் கேரளா வனத்துறையினர் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை மணலார் பகுதிக்கு லோயர் கேம்ப், கூடலூர், கம்பம் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் வரும் வழியில் கம்பம் பைபாஸ் சாலை துவங்கும் இடத்தில் தமிழக விவசாயிகள் மற்றும் மேற்பட்டோர் வாகனத்தை வழிமறித்து தடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களை தமிழக காவல்துறையினர் தடுத்து தடுத்து நிறுத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சாலையின் ஓரத்தில் நின்று தமிழக விவசாயிகள் கேரள வனத்துறையினர் தமிழகத்துக்குள் வரக்கூடாது என கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.