OPPO India தனது பிரபலமான F வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, F31 Pro+, F31 Pro மற்றும் F31 என்ற மூன்று மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ளது..

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது..
வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும்..
.
Pro+ மாடலில் வேப்பர் சேம்பர், எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43°C வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.. .

சாப்ட்வேர் மட்டத்தில் OPPO-வின் டூயல்-எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் (Trinity Engine மற்றும் Luminous Rendering Engine) மூலம், ஸ்மார்ட்போன் 72 மாதங்கள் (6 ஆண்டுகள்) வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது.
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமரா வசதிகள்:50MP மெயின் கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் பல AI வசதிகள் 4K வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது…
ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகள். பேட்டரி ஆயுள் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.
நாடு முழுவதும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் (OPPO இ-ஸ்டோர், ஃப்ளிப்கார்ட், அமேசான்) தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












; ?>)
; ?>)
; ?>)