மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நேதாஜி நகரில் குடியிருந்து வருபவர் தங்கராஜ் (86), தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.,இவரது மனைவி பவளக்கொடி(76) இணைபிரியாத தம்பதியினர் இவர்கள் எல்லோருடனும் அன்பாகவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் இரவு 12 மணி க்கு உடல்நலக் குறைவு காரணமாக மனைவி இறந்த நிலையில் இறந்த தூக்கம் தாங்காமல் தங்கராஜ் அதிகாலை 5 மணி க்கு இறந்துள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,
இவர்களுக்கு கணேசன் என்ற மகனும் வாணி தேவி, சாந்தி, வசந்த ராணி என மூன்று மகள்களும் உள்ள நிலையில் திருமணமாகி வசித்து வருகின்றனர் .,
இறந்த தம்பதியின் உடல்கள் வீட்டின் முன்புறம் பெட்டிகளில் அருகில் வைத்து உறவினர்கள் இரண்டு மாலைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தி வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,

மேலும் இறப்பில் இணைபிரியாமல் மனைவி மற்றும் கணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.,