கள்ளவெடி தடுப்பு நடவடிக்கைக்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன், தலைமையில் போலீசார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி, சுப்பிரமணியபுரம்,இறவார்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

சல்வார்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 32) என்பவர் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து வீட்டை சோதனை நடத்தினார்கள். வீட்டில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்படுவது தெரிந்தது. போலீசார் சோதனைக்கு வருவது தெரிந்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள்.
போலீசார் தயார் செய்யப்பட்ட ஐந்து பெட்டிகளில் இருந்த சரவெடி கள் மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.