அரியலூர் அண்ணா சிலை அருகில் , அரியலூர் மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் புலவர் அரங்கநாடன் வரவேற்றார். உண்ணாவிரத அறப் போராட்டத்திற்குசொல் ஆய்வு பேரறிஞர் தமிழ் செம்மல் ம.சோ.விக்டர் தலைமை தாங்கினார்.

தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி .பாலகிருஷ்ணன்,தமிழ் சான்றோர்கள் நாம் தமிழர் குமுத வாணன், கவிஞர் மா தர்மலிங்கம்,கவிஞர் சீனி அறிவு மழை, தென்மொழி ஈக வரசன்,பொன் தங்கராசன்,சங்கீதா இரா கண்ணன் ,தமிழ் தேசிய பேரியக்கம் க. முருகன்,இரா ராஜேந்திரன், இரா எழுகதிர் ,தமிழ் செம்மல் பெ. ஜெயராமன், திருச்சி செஞ்ஞாயிறு , கோ சண்முகசுந்தரம், செஞ்சேரி வே செந்தில்குமரன்,தமிழ் செம்மல் ப.முத்துக் குமரன்,பூலாம்பாடி கவிஞர்தமிழோவியன் ,ஆ.செ.த .அறிவுடை நம்பி , ஆசிரியர் அ.நல்லப்பன்,மானமிகு வே கந்தசாமி, பாவலர் மா மாடசாமி, வெ இரா திருச்சி சந்திரசேகர், ம .சுப்பு ராயன், பாரதிதாசன் பொது நல மன்றம் சீ குமார், கடம்பூர் ஞானவெட்டியான், நக்கம்பாடி ஆ முருகேசன், பெரியார் அங்காடி ஆ.சக்திவேல், தமிழ் களம் வே தமிழ்மணி, பெண்ணாடம் தங்க தமிழன் ,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தமிழ் வழி கல்வி இயக்க தலைவர் அ.சி .சின்னப்பத்தமிழர் தொடக்க உரையாற்றினார்.தொடர்ந்து தமிழ் வழி கல்வி இயக்க பொதுச்செயலாளர் தமிழ்ச்செம்மல் வை.தேனரசன்,செந்தமிழ் எழுச்சி நடுவம் செந்தமிழ் வேந்தன்,தமிழ் வழி கல்வி இயக்கப் பொருளாளர் த.மணி சேகரன் ஆகியோர் தமிழ் வழி கற்றல் வேண்டும், தமிழ் வழியில் கற்றவருக்கே தமிழ்நாட்டில் வேலை வழங்க வேண்டும் ,அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் மொழியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் வா அண்ணாமலை, தமிழர் நீதி கட்சி தலைவர் செந்தமிழ் போராளி சுபா இளவரசன், ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்துகொண்டு தமிழ் வழி கல்வியை தமிழ்நாட்டில் வளர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்.
உண்ணாவிரத அறப் போராட்டத்தில், தமிழ் சித்தர் துரை .வேலுச்சாமி, கவியரசி இளவரசன், சிற்பி பெ .பாரிவள்ளல்,சிற்பி அறிவன் ஆதி ,சு செல்வகுமார், பாரதி கணினி பா சுகர், கி பாண்டியன், தேனூர் சின்னத்தம்பி, தமிழ் மருத்துவர் .தங்க சண்முகசுந்தரம், அ.செந்தமிழ் கனல், சி.கதிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் தமிழ் களம் இளவரசன் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.