அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்க தலைவர், பதிவு பெற்ற பொறியாளர் நிலை 1, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு உறுப்பினர், தி.அறிவானந்தம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 ஐ தமிழாக்கம் (தற்போது ஆங்கிலத்தில் உள்ளது) செய்து வெளியிட வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலினுக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, வணக்கம், ஐயா,நான் அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறேன், நகர் ஊரமைப்பு துறையில் பதிவு பெற்ற பொறியாளர் நிலை-1 ஆக பதிவு செய்து தொழில் புரிந்து வருகிறேன் அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரவையின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளேன்.

ஆங்கிலத்தில் உள்ள விதிகளுக்கு ஒவ்வொரு அதிகாரிகளும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கண்டு கொள்வதால் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் புதிய மனை பிரிவு அமைக்க அனுமதி பெறுவதில் சிரமங்களும் தாமதங்களும் ஏற்படுகிறது.
எனவே தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் -2019 ஐ தமிழாக்கம் வெளியிடுமாறு பணிவு அன்போடு கேட்டு கொள்கிறேன் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.