அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் , தையல் தொழிலாளர்களுக்கு இலவச தையல் மிஷின் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்க கோரி , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் வி. சரண்யா தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்திற்கு வி .ராஜாமணி, எஸ் மகாதேவன்,எம் கற்பகம்,ஆர் மல்லிகா,எஸ் கீத பிரியா, சி. சித்ரா,சி விஜயலட்சுமி, எஸ் நித்யா,ஜான்பீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட தலைவர்கள் பி.துரைசாமி, கு.சகுந்தலா,சிஐடியூ மாவட்ட பொருளாளர் ஆர் ரவீந்திரன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர் சிற்றம்பலம்,எம் சந்தானம்,அரியலூர் மாவட்ட தையல் தொழிலாளர் சங்க செயலாளர் ஏ செல்வாம்பாள் , மாவட்ட பொருளாளர் கே பாரதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழ்நாடு தையல் தொழிலாளர் நலவாரியத்திற்கென தனி நிதியம் ஏற்படுத்தி தர வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மாநில அளவி முத்தரப்புகுழு அமைத்திட வேண்டும்.

கட்டுமான தொழிவாளர்களுக்கு நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி, வீடுகட்ட நிதிஉதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்திவழங்கிட வேண்டும். தையல் கடை, கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும்.
கூட்டுறவு தையல் அனைத்து உறுப்பினர்களுக்கு துணி வழங்கிடவும் கூலி உயர்வு, அடையாள அட்டை, லக்கேஜ் கட்டணம், தீபாவளி போனால் , EPF, ESI திட்டத்தை அமல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அருண் பாண்டியன் நன்றி கூறினார்.











; ?>)
; ?>)
; ?>)