அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தினம் விழா கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினம் செப்டம்பர் 15ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி , அரியலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க அலுவலகத்தில்,இந்திய பொறியியல் துறை தந்தை விஸ்வேஸ்வரய்யா திருவுருவப்படத்திற்கு சங்கத்தின் சாசன தலைவர் வி . ஶ்ரீனிவாசன் தலைமையில்,அரியலூர் கட்டுமான பொறியாளர்சங்கத் தலைவர் தி.அறிவானந்தம்,துணைத் தலைவர் எஸ் செந்தில் குமார்,உடனடி முன்னாள் தலைவர் D.அழகு தாசன், சங்கச் செயலாளர் நாகமுத்து, பொருளாளர் கார்த்திக்,பொறியாளர்கள் அருண்குமார்,வினோத் ,வேல்முருகன்,அழகேசன், அருள்,என் பாலசுப்பிரமணியன், அசோக் உள்ளிட்டார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

அதனை தொடர்ந்து தேசிய பொறியாளர்கள் தினத்தினை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பொறியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.