• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டாள் மாரியம்மனுக்கு வெள்ளி கவசங்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2025

அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் மாரியம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவிலில் அவனியாபுரம் சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு பிச்சைக்கனி நாடார் குடும்பத்தினர் சார்பாக சுமார் 15 கிலோ எடையுள்ள ரூபாய் 16 லட்சம் மதிப்பு உள்ள வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது முன்னதாக கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கணபதி ஹோமம் பூஜைகள் நடைபெற்ற பின் வெள்ளிக்கவசம் அயன் பாப்பாக்குடி அய்யனார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்கப்பட்டது.