• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உவரி தரும் உறுதி!

Byவிஷா

Sep 15, 2025

தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் லிங்க மூர்த்தி, லிங்கம், லிங்கபாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்பு மூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும்  உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை கண்கண்ட தெய்வமாக வழிபடுவர்களாக இருப்பார்கள்.  இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஆக இருக்கும்.

மூன்று மாவட்டங்களில் வாழும் அன்பர்களும் அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கின்ற அன்பர்களும் சதா சர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும் உவரி சிவனாரைத்தான்.  

திருச்செந்தூரின் கடலோரத்தில் முருகப் பெருமான் அருளாட்சி நடத்த உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி அருள் ஆட்சி நடத்துகிறார் சிவனார்

கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி கிணற்றிலும் நீராடுகின்றனர்  தனி கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீ கன்னி விநாயகரை வணங்கி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை வேண்டினால் சகல பிரச்சனைகளும் பறந்து ஓடும் சந்தோசமும் நிம்மதியும் பொங்கி வாழலாம்.

கோவிலுக்கு பின்னே ஸ்ரீ பூரணை புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீ வன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார் இவருக்கு பொங்கல் படையல் இட்டு பிரார்த்திக்கின்றனர் பக்தர்கள்

இங்கே அம்பாளுக்கு சன்னதி இல்லை ஆனால் அவளின் இன்னொரு வடிவமாக வழங்கப்படும் கிராம தேவதையான ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் சன்னதி கொண்டிருக்கிறாள்.

இங்கு மஞ்சள் அல்லது குங்குமபிஷேகம் செய்து வழிபட்டால் வீடு வாசலுடன் இல்லறத்தை சிறக்க செய்வான் என்பது ஐதீகம்.  

இப்படிப்பட்ட சுயம்புலிங்க சுவாமி கோயிலில்தான்… தங்கள் நோய்கள், பிரச்சினைகள் தீர வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள்..  

நோய் தீர்த்ததும் தங்களால் இயன்ற தோன்றிய தொகையை பிடிப்பணம் செலுத்தி நேர்த்தி கடனை அடைக்கின்றனர் இந்த பிடி பணம் நேர்த்திக்கடன் சம்பிரதாயத்துக்கு  

ஒரு சுவையான வரலாறு உண்டு

குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அந்தக் காலத்தில் நடந்தே வந்து தரிசிப்பார்கள்.  அப்போது வழியில் ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப்பாறுவார்கள்.

ஒரு முறை அந்த தோப்பில் உரிமையாளர் கடும் நோயால் அவதிப்படுகின்றார். அங்கே இளைப்பாறியவர்கள், அந்த சுயம்புலிங்க சுவாமி உன்னை கைவிட மாட்டார் என்று சொல்லிவிட்டு உவரிக்கு வந்து தரிசனம் முடித்து விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல பூரணமாக குணமாகி இருந்தாராம் அவர்.

சுயம்புலிங்க சுவாமி அருள் கடாட்சத்தை எண்ணி நெகிழ்ந்த  அந்த தோப்பு முதலாளி அப்போது விலை மதிப்பு வாய்ந்த  திருவிதாங்கூர் நாணயத்தை  உவரி ஸ்தலத்துக்கு வந்து நாணயம் காணிக்கை செலுத்தி வணங்கினார்.  அன்று முதல் பிடிப்பணம் என்னும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாக சொல்லுவார்கள்.

அழகிய கடல் அதன் கரையை ஒட்டி தேரோட்டம் நடைபெறுவதாக போடப்பட்டுள்ள தார் சாலை.  கோவிலை சுற்றிலும் மணல் பரப்புகளும் அழகிய மரங்களும் என ரம்யமாக காட்சி தரும் உவரியை  சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

தற்போது அழகிய கோபுரம் அமைக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டுள்ளது கோவில் நிர்வாகம்

சுயம்பு மூர்த்தியாக கடம்ப பேரி நடியில் இருந்து வெளிப்படும் போது சந்தனம் பூசப்பட்டது அல்லவா?  எனவே இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது.  கட்டையில் அரைக்கப்பட்ட சந்தன பிரசாதம் தரப்படுகிறது இந்த சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள சகல நோய்களும் தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம் நம்பிக்கை

 உவரி சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து வருவது இன்றும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

முற்காலத்தில் போக்குவரத்து வாகன வசதி இல்லாத காரணத்தால் மக்கள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இடையன்குடி, நவ்லடி, ஆனைகுடி, திசையன்விளை, எள்ளு விளை, குட்டம், தட்டார் மடம், புதூர், கொம்மடி கோட்டை, தெற்கு உடைபிறப்பு, மணி நகர் சுண்டன்கோட்டை பகுதிகளில் இருந்து கால்நடையாக  நடந்து சனிக்கிழமை தோறும் ஒன்றாக வீடு திரும்புவது வழக்கமாக இருந்தது

அப்போது ஒருமுறை ஒரு குடும்பத்தினர் சற்று தாமதமாக இறைவனை தரிசித்து சென்றனர். அதனால் அவர்கள் தனியாக சென்றனர்.  அவ்வாறு செல்லும் வழியில் ஆல மரங்கள் அடர்ந்த பகுதியில் செல்லும்போது மூன்று திருடர்கள் அவர்களை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி அவரிடம் இருந்து நகை மற்றும் பொருட்களை அபகரித்தனர்.

செய்வதறியாது திகைத்து நின்ற குடும்பமும், அந்தக் குடும்ப தலைவரும் சுயம்புலிங்க சுவாமி நினைத்து அழுது புலம்பினார். அவ்வேளையில் நகைகளை கொண்டு செல்லும் மூன்று திருடர்களில் ஒருத்தருடைய பார்வை பறிபோனது.

அப்போது அசிரீரியாக ஒரு குரல் திருடர்களை எச்சரித்தது.  உடனே திருடர்கள் மூவரும் அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடைய  பொருள்களை ஒப்படைத்தனர்.

அனைவரும் இறைவனை நோக்கி மறுகணம் வணங்க அத்திருடர்களுக்குப் பார்வை வந்தது. இறைவனின் மகிமையை எண்ணி பக்தர்கள் பரவசமடைந்தனர் சுயம்புலிங்க சுவாமி அவர் பிள்ளைகள் செல்லும் வழியில் மாடன் போல் துணை இருப்பார் என்று எண்ணி வியந்து இறைவனை வணங்கினர்.

உவரி சுயம்புலிங்க சுவாமியை தரிசித்து சந்தனத்தை உடலில்  மணக்க மணக்க பூசிக்கொண்டு கடல் காற்றை அனுபவிக்கும் போது கவலையாவது துக்கமாவது காற்றோடு காற்றாக கலந்து விடும் என்பது உறுதி.

உவரி சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் காண வந்து சிவனாரின் அருளைப் பெற்று பயனடையுங்கள்!