அண்ணாவின் 117_ வது பிறந்த நாளில் திமுகாவின் சார்பில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அண்ணாவின் 117 பிறந்த நாள் குமரி மாவட்டம் வந்துள்ள, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. கன்னியாகுமரியில் முதல் நிகழ்வாக. ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான, அமைச்சர் மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, முன்னாள் நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன்,

குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு முன்னாள் தலைவர் பிரபா G.
ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி
நகராட்சி திமுக கவுன்சிலர்கள், அகஸ்தீஸ்வரம் தெற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர்
தாமரைபாரதி மற்றும் திமுகவின் பல்வேறு பொருப்பாளர்கள், மகளிர் அணியினர்
மிகத் திரளாக கலந்துக்கொண்டார்கள்.