கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ஆரோக்கியபுரம் மீனவ பெண்கள் 50 பேருக்கு நிழற்குடை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.
ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை மற்றும் தெருக்களில் மீன் விற்பனை செய்யும் பெண்கள் வெயில், மழை காலத்தில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் நிழற்குடை வழங்குமாறு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று காலை ஆலய வளாகத்தில் 50 பேருக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை கிங்ஸ்லி ஷாஜூ தலைமை வகித்தார். கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் 50 மீனவ பெண்களுக்கு நிழற்குடை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், ஆரோக்கியபுரம் பங்குப்பேரவை துணைத் தலைவர் அமல்ராஜ், பொருளாளர் மரியலில்லி, கலப்பை மக்கள் இயக்க மீனவரணி தலைவர் எட்வின், ஆரோக்கியபுரம் மகளிர் பிரிவு நிர்வாகிகள் மேரி, லிசி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..