தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளர் திருமாறன் ஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை நடத்தினார்கள்.

மார்க்கையன் கோட்டையில் இருந்து சங்கராபுரம் வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்
தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்றிருந்த பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு ,
நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வண்டியை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பரிசு பத்தாயிரம் ரூபாய் மற்றும் கேடயங்களை பரிசாக
வழங்கினார்கள். இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.