ஸ்ரீ பொற்பனைக்கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள வடக்கு கோட்டை ஸ்ரீ பொற்பனை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரகங்கள் ஹோமம் வாஸ்து பூஜையுடன் தொடங்கி ஆறுகாலை யாக பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து யாக பூஜைகள் சிறப்பாக செய்யப்பட்டு புனித நீர் கொண்டு பூஜிக்கப்பட்ட தடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று அருள்மிகு பொற்பனை காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பொற்பனைக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.