அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு நிகழ்விற்கு பின்
செய்தியாளர்கள் சந்திப்பில். சபாநாயகர் அப்பாவு தெரிவித்தது.
பெங்களூராவில் நேற்று (செப்டம்பர்_12)ல் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்ற நான் தெரிவித்தது. வரி வசூலிக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கும் தரவேண்டும்.

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது. மத்திய காங்கிரஸ் அரசு இரண்டு அடுக்கு ஜிஎஸ்டியை அறிவித்தபோது. அன்றைய குஜராத் முதல்வராக இருந்த மோடி சொன்னது.
மாநில அரசுகள் மத்திய அரசிடம், மாநில அரசுகள் கை ஏந்தி நிற்கவேண்டுமா என்று கேள்வி எழுப்பியவரின் 11_ ஆண்டுகளில் ஜிஎஸ்டி 4_ங்கு அடுக்கள் நிலையில் எவ்வளவு வரி வசூலிக்கிறது.
மாநில அரசுகளுக்கு வரி வசூலிக்கும் உரிமையை தரவேண்டும் என சபாநாயகர்கள் மகாநாட்டில் நான் பேசியதை, உத்தரபிரதேச சபாநாயகர் எதிர் கருத்து தெரிவித்தார்.அதே நேரம் மேற்கு வங்காளம் சபாநாயகர் எனது கருத்தை வரவேற்றார்.
இராணுவத்திற்கான ஒற்றை செலவு மட்டுமே மத்திய அரசிற்கு,இது தவிர்த்து அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வருவாய் ஈட்டிவருகிறது.

திருச்சி வரும் விஜய் யை வரவேற்க்க பெரும் கூட்டம் கூடியுள்ளதே.?
விஜய் மட்டும் அல்ல வடிவேலுவின் சினிமா நகைச்சுவை காட்சிகளை நான் விரும்பி பார்ப்பேன். திரையில் பார்க்கும் நடிகரை நேரில் பார்க்க விரும்புவர்களின் கூட்டம் தான் இது.
சட்டமன்ற தேர்தல் 2011யில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுக்கு கூடிய கூட்டம் எவ்வளவு.?
பாஜகவின் திருட்டு ஓட்டு பற்றிய கருத்து என்ன என்ற கேள்விக்கு. இந்த பிரச்சினை மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பைப் பெறுகிறது என்பதை பொருத்துயிருந்து தான் பார்க்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.
சபாநாயகரின் பேட்டியின் போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு உடனிருந்தார்.







; ?>)
; ?>)
; ?>)