மதுரை திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே விநாயகர் கோவில் ஒன்று உள்ளது விலங்கு நல ஆர்வலரும் பாம்பு பிடி வீரருமான ஸ்நேக் பாபு என்பவர் ஆட்டோவும் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் இன்று திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இதில் அவர் தற்செயலாக சாமி கும்பிடுவதற்காக சென்ற பொழுது உள்ளே பலத்த காயத்துடன் ஒரு வளர்ப்பு நாய் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் உடனடியாக அதை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். பின் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நம்மிடம் தெரிவித்தார்.
பின் அவர் நம்மிடம் இந்த நாய் காயத்துக்கு குறித்து நாம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தது. இது ஒரு வளர்ப்பு நாய் என்பதும் யாரோ இது கடுமையாக தாக்கி விட்டு விட்டு சென்று விட்டார்கள் எனவும் இதனால் பயந்து எது கோயிலுக்குள் சென்று தஞ்சம் அடைந்து விட்டது என தெரிவித்தார். மேலும் நான் என்ன சொன்னாலும் அதை கேட்டு அதன்படி அந்த வளர்ப்பு நாய் நடந்து கொண்டது இதை யாரோ வேண்டுமென்றே தெருவில் விட்டு சென்றுள்ளார்கள்.

இதை கடுமையாக தாக்கியதில் இது பயந்து போய் கோவிலுக்கு தஞ்சம் அடைந்து இருக்கிறது என தெரிவித்தார் இது போன்ற விலங்குகளை யாரும் தாக்க வேண்டாம் எனவும் அதுவும் ஒரு உயிரினம் தான் எனவும் நம்மிடம் தெரிவித்தார் விநாயகர் கோவிலில் படுகாயத்துடன் நாய் ஒன்று தஞ்சம் அடைந்தது அப்பகுதியில் நெஞ்சே உலுத்துவதாக மக்கள் தெரிவித்தனர்.