• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி..,

ByK Kaliraj

Sep 11, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம். சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

செல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் பின்னர் முதலுதவி அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் மழை பெய்து கண்மாய் மற்றும் ஊரணிகளில் தண்ணீர் நிரம்பினால் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறங்க முயற்சி செய்யக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.