• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByS. SRIDHAR

Sep 10, 2025

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் திமுக பேரூர் கழகச் செயலாளர் அக்பர்அலி என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது குடும்பத்தார்கள் சார்பில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் அன்னவாசல் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன் RRS.மாரிமுத்து மாவட்ட ஆயலக அணி துணை அமைப்பாளர் தச்சம்பட்டி மணி பேரூர் கழகச் செயலாளர் MSA.முகமதுநிஷா மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்

அப்போது அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில் திமுக கழகத்திற்காக அயராது உழைத்தவர் முன்னாள் அன்னவாசல் பேரூர் கழகச் செயலாளர் அக்பர்அலி ஆனால் அவர் மறைந்த இரண்டு வருடங்களாக அவரது குடும்பத்தார்கள் மட்டும் நினைவில் இல்லாமல் அனைத்து தரப்பினரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் அக்பர் அலி அவர்களின் புதல்வன் நிஷா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் அண்னவாசல் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவச் செல்வங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் கடந்த ஆண்டு முன்னாள் அண்ணாவாசல் திமுக பேரூர் கழக செயலாளர் அக்பர்அலி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரண பொருட்களை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது