அரியலூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள், வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி,
தனிநபர்கொடுக்கல்-

வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்கு கள், காசோலை சாலை மோசடி வழக்குகள் மற்றும் திருமண உறவு ாசடி தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) நுகர்வோர் நீதிமன்ற
வழக்குகள் ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அரிய வாய்ப் பாகஅமையஉள்ளது.தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் இருதரப்பினரும் சமரசமாக செல்வதால் ஏற்படும் பயன்கள். தரப்பினர்கள் நீதி மன்ற கட்டணமாக செலு த்தியுள்ள முழு தொகை யையும் திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.
சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.இருதரப்பினர்களுக்கு வெற்றி – தோல்வி என்ற மனப்ப மனப்பான் மை ஏற்படாது. எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் வருகிற 13-ந் தேதி , சனிக்கிழமை நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்குகளுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா தெரிவித்துள்ளார்.











; ?>)
; ?>)
; ?>)