சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது,
செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும்.

தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள். வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்கிற உணர்வு வராது.
தமிழ்நாடு காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது. வேலூர் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்த இரண்டு காவல் துறையினரை பணி மாற்றம் செய்துள்ளார்கள். பத்து வயது பெண்கள் முதல் 70 வயது பெண்கள் வரை பாலியல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சி இதுவரை நடந்தது.
அடிபட்டவர்கள் மீது வழக்கு அடித்தவர்கள் மீது வழக்கு இல்லை. ஏர்போர்ட் மூர்த்தி கைது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கருத்து.