இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அண்ணா சிலை அருகே, விழிப்பு ணர்வு பேரணியினை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளையின் அலுவலர் சார் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டத் தலைவர் செ.ஜெயராமன்_ தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும்,சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆ.சண்முகம் வரவேற்றார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ்.பா.சாஸ்திரி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)எஸ்.வேதலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ),அரியலூர். அலுவல்சார் தலைவர், ஜூனியர் ரெட் கிராஸ்
பாலசுப்ரமணியன், அரியலூர் அரசுகலைக் கல்லூரிமுதல்வர் முனைவர்.சே.சித்ரா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணியானது , முக்கிய கடை வீதிகள் வழியே சென்று,நிர்மலா மேல்நி லைப்பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியின் முடிவில், நிர்மலா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் , காவல்துறை ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர்,யூத் ரெட் கிராஸ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ஸ்டீபன்,ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர்சி.சிவசங்கர், ஆகியோர் போதை பொருள் நுகர்வு நாள் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினர்.பேரணி முடிவில்,இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை பொருளாளர் இ.எழில்நன்றி கூறினார்.

பேரணியில்,சங்கத்தின் துணைப் புரவலர் _சகானா காமராஜ்,ஆயுள் உறுப்பி னர் சடையப்பன்ஆகியோர் வாகன பிரச்சாரம் மேற் கொண்டுவிழிப்புணர்வு ஏற்படுத்தினர் .பேரணியில்மாவட்டபொறுப்பாளர்கள், புரவலர்கள், துணைப் புரவலர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆயுள் உறுப்பினர்கள் – ரெட் கிராஸ் அமைப்பின் துணை அமைப்பான யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மூலம் கல்லூரி மாணவ மாணவிகள், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.