விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.

பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,முதல் காலயாக பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் காலயாக பூஜை ,ராஜா கோபுரத்தில் உள்ள விமான கலசங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பைரவர், விநாயகர், பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன், வீரபுத்திரர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஸ்ரீ முருகன் பெயிண்ட் உரிமையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் கோயம்புத்தூர் தொழிலதிபர் காளியப்பன் கலந்து கொண்டார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்













; ?>)
; ?>)
; ?>)