• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவலர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்..,

ByT. Balasubramaniyam

Sep 6, 2025

காவலர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார். .அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர்கள் இரத்ததானம் வழங்கினர்.

தொடர்ந்து மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் நினைவாக உள்ள நீத்தார் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணி ப்பாளர் முத்தமிழ் செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர்கள்
ரகுபதி மற்றும் இரவிச்ச ந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் காவலர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில்,செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து,உடல்நல குறைவால் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் செல்வம் குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதியான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை காவல் கண்காணிப்பாளர் மறைந்த காவலரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.