விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது . அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்த நிலையில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜை ,தீபாரதனை, நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள விமானங்களுக்கும், பரிவார விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10:30 மணியளவில் பத்திரகாளியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெறுகிறது.
மாலை 4 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மேலும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு திருப்பணி குழு கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)