விஜய் தொண்டர் கொடுத்த புகாரை வைத்தே, விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 21 வியாழக் கிழமை மதுரையை அடுத்த பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப்வாக் வந்த நிலையில், அந்த நடைமேடை மீது ஏறி விஜய்யை நெருங்கிப் பார்க்க ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் கிரீஸ் தடவப்பட்ட கம்பிகளைப் பிடித்து நடைமேடை மீது ஏறிய நிலையில், விஜயின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் அவர்களை தள்ளிவிட்டனர்.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற தவெக தொண்டர், விஜய்யின் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டார்.
அவர், பெரம்பலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம்,தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பரபரப்பு புகார் அளித்தார்.
மதுரையில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் , தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்யும்போது அருகில் சென்று பார்க்க முயன்ற அக்கட்சியின் தொண்டர் , பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் நெருங்கி சென்றார்.
அவரை விஜய்யின் பாதுகாவலர்கள் குண்டுகட்டாக தூக்கி கீழே வீசினார். இந்த சம்பவம்அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆகஸ்டு 25 ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் தமிழக வெற்றி கழக தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோஷம் ஆகிய இருவரும் புகார் மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில், மாநாட்டில் கலந்து கொண்டுநடிகர் விஜய் அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவரை நெருங்கிய நிலையில் விஜயின் பாதுகாவலர்கள் தன்னை தூக்கி வீசியதாகவும்,இதனால் தனக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் எனவே என்னை தூக்கி வீசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது அதே கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது, தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தொண்டர் புகாரையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “பெரியம்மாபாளையம் சரத்குமார் என்ற த.வெ.க தொண்டர் புகாரையடுத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் விஜய் மற்றும் பெயர் தெரியாத பவுன்சர்கள் 10 பேர் மீது, பி என் எஸ் 296 (b)தகாத வார்த்தைகளால் திட்டுவது, 115 (2) தாக்குவது, 182 (2) கீழே தள்ளி விடுவது ஆகிய மூன்று பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இவ் வழக்கு பதிவை, விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 10 பேர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து வழக்கு பதிவு மதுரை மாவட்ட காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
அரசியல் வரலாற்றில் விஜய் மீது பதிவு செய்யப்படும் முதல் வழக்கு இதுவாகும்.
