தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது

இக்கோவிலில் 9 கும்பு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் நடைபெற்று.

முடிவடைந்தனர் அதனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 4.ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது
இந்நிலையில் கும்பாபிஷேகம் கலசத்தில் ஒன்பது வகையான தானியங்களை நிரப்பப்பட்டு அதனைத் தொடர்ந்து.
கலசம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்த கலசத்தில் நிரப்பப்படும் தானியங்கள் அனைத்தும் பாதுகாப்பாக கலசத்திலே பல ஆண்டுகள் இருக்கும் என்பது ஐக்கியம் என்று தெரிவித்துள்ளனர்

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால யாக ஹோமங்கள். விஷ்வக்சேன ஆராதனம், ம்ருஞ்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், புண்யாகவசனம், பேரி பூஜை, அக்னி ப்ரதிஷ்டை, கலா ஹர்ஷணம் , பாலிகைபூஜை, பூர்ணாஹுதி யாக பூஜைகள் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து உச்சவரான ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரணைகள் நடைபெற்றது
இந்த முதல் கால யாக பூஜையில் உப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.













; ?>)
; ?>)
; ?>)