மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் 9 முதல் 15 வார்டுகள் வரை உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பட்டா மாற்றுதல், குடும்ப ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீடு, ஆதார், உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அரங்குகளில் உள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றனர்.மேலும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ராமச்சந்திரன்,சமூக நலத்திட்ட தாசில்தார் பார்த்திபன்,பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, மாவட்ட திமுக அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், பேரூராட்சி தலைவர்கள் சுமதிபாண்டியராஜன், ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர்
ராமராஜ், பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராம்குமார், மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..













; ?>)
; ?>)
; ?>)