கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 43_ஆண்டுகளாக பல பொதுசேவையில் குறிப்பாக கல்வி,மருத்துவ உதவிகள் செய்வதை ஒரு சமூக கடமையாக கொண்டு செயல்படும்.

கன்னியாகுமரி மாவட்ட பவரவர் சமுதாய முன்னேற்ற நலசங்கத்தின் 44_ வது ஆண்டு விழா நடைபெற்றது.
பரவர் சமுகத்தில் பல்வேறு நிலைகளில், அரசுத்துறை,வான்படை பதவி வகித்தவர்கள் பாராட்டப்பட்டதுடன். பரவர் சமுகத்தில் உள்ள மாணவர்கள் கடந்த ஆண்டு பள்ளி இறுதி அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் பாராட்டப்பட்டதுடன், கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது போன்று. மத்திய, மாநில, மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் இந்த நிகழ்வில் பாராட்டப்பட்டனர்

விழாவின் பரவர் சமுகத்தை சேர்ந்த வான்படையில் பைலட்டாக இருந்து ஓய்வு பெற்ற. தூத்துக்குடியை சேர்ந்த கலாபன் வாஸ் விழாவில் பாராட்டப்பட்டார்.
நிகழ்வு குறித்து அமைப்பின் செயலாளர். கிறிஸ்டி மைக்கேல் தெரிவித்தது.
10_ம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 45பேருக்கும்,12ம் வகுப்பில் 15 மணவர்களுக்கும், உயர் கல்வி பயிலும் 5 பேர் என மொத்தமாக கொடுத்த உதவித்தொகை ரூ.ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வழங்கியுள்ளதுடன் 100 சதவீதம் தேர்வு வெற்றியை எட்டிய 5_பள்ளிகளுக்கும், விளையாட்டு வீரர்களையும் பாராட்ட நினைவு பரிசும் வழங்கப்பட்டது..

இன்றைய விழாவிற்கு டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தார். பேராசிரியர். பெர்னாட் சந்திரா வரவேற்றார். நிகழ்வில் சமுகத்தின் முன்னோடிகள் முதல் வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறையினர் பாரட்டப்பட்டார்கள்.
நிகழ்வில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நடனம் நடைபெற்றது.