• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வரதட்சணை கொடுமையால் பெண்தற்கொலை..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2025

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன்- தனபாக்கியம் ஆகியோரது மகன் ரூபன்ராஜ் என்பவருக்கும் உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி- செல்வி என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடக்கத்தில் 300 பவுன் நகை வரதட்சணையாக மணமகன் வீட்டார் தரப்பில் கேட்ட போது 150 பவுன் நகைகள் மட்டுமே போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் குடும்ப பிரச்னை காரணமாக செல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைப்பதாக கிடைத்த தகவலால், மீண்டும் தன்னுடன் கணவரை சேர்த்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை சந்தித்து பேச பிரியதர்ஷினி சென்ற நிலையில் அதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக செல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் அக்னி-செல்வி அளித்த புகாரின் பேரில் கணவர் ரூபன்ராஜ் , மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் தான் உடலை பெறுவோம் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.