கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் நாளை (ஆக. 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் அதாவது செப். 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில் ரூ.5 முதல் ரூ.225 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பராய்த்துறை, வேலன்செட்டியூர் (ஆண்டிப்பட்டிகோட்டை) சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்கிறது.

மணவாசி மற்றும் ஆண்டிப்பட்டிகோட்டைசுங்கச்சாவடியில் ஒரு முறை பயன்பாட்டிற்கான பயணக் கட்டணம் கார், பயணியர் வேன், ஜீப்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் ரூ.60ஆகவே தொடர்கிறது. கடந்தாண்டு உயர்த் தப்படாத இலகு ரக வாகன கட்டணம் நிகழாண்டு ரூ.100ல் இருந்து ரூ.105ஆகவும், டிரக், பேருந்து கட்டணம் ரூ.205ல் இருந்து ரூ.210 ஆக வும், பல அச்சுகள் கொண்ட வாகன கட்டணம் ரூ.325ல் இருந்து ரூ.335ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கார், பயணியர் வேன், ஜீப் ஒரே நாளில் பன்முறை கட்டணம் கடந் தாண்டு ரூ.90லிந்து ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.85 ஆக மாற்றப்பட்ட நிலையில் தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு மீண்டும் ரூ.90ஆனது.

மாதாந்திர பாஸ் கட்டணம் கடந்தாண்டு ரூ.1,760லிருந்து ரூ.15 குறைக்கப்பட்டு ரூ.1,745 ஆன நிலையில் நிகழாண்டு ரூ.40 உயர்த்தப்பட்டு ரூ.1,785ஆனது.
இலகு ரக வர்த்தக வாகன பன்முறை பயணக்கட்டணம் உயர்த் தப்படாமல் ரூ.155 ஆக நீடிக்கிறது. மாதந்திர பாஸ் கட்டணம் கடந் தாண்டு ரூ.3,075லிருந்து ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.3,055 ஆனது. நிகழாண்டு ரூ.70 உயர்த்தப்பட்டு ரூ.3,125 ஆனது.
பேருந்து மற்றும் டிரக் ஒரே நாளில் பன்முறை கட்டணம் கடந்தாண்டு ரூ.310லிருந்து ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.305 ஆனது. நிகழாண்டு ரூ.5 உயர்த்தப்பட்டு மீண்டும் ரூ.310ஆனது. ஒரு மாதத்திற்கான பலமுறை கட்டணம் கடந்தாண்டு ரூ.6,150லிருந்து ரூ.45 குறைக்கப்பட்டு ரூ.6,105 ஆனது. நிகழாண்டு ரூ.140 உயர்த்தப்பட்டு ரூ.6,245ஆனது.
பல அச்சு (2 அச்சுகளுக்கு மேல்) கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் கடந்தாண்டு ரூ.330லிருந்து ரூ.5 கு றைக்கப்பட்டு ரூ.325ஆன நிலையில் நிகழாண்டு ரூ.10 உயர்ந்தப்பட்டு ரூ.335ஆனது. ஒரே நாளில் பலமுறை பயணக் கட்டணம் கடந்தாண்டு ரூ.495லிருந்து ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.490 ஆன நிலையில் தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.500ஆனது. மாதாந்திர பாஸ் கட்டணம் கடந் தாண்டு ரூ.9,885லிருந்து ரூ.70 குறைக்கப்பட்டு ரூ.9,815 ஆன நிலையில் நிகழாண்டு ரூ.225 உயர்த்தப்பட்டு ரூ.10,040 ஆனது.

கடந்தாண்டு சில கட்டணங்கள் உயர்த்தப்படாமல், ஒரு சில கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கார், வேன், ஜீப் ஒரு முறை பயன்பாட்டிற்கான பயணக்கட்டணம், இலகு ரக வாகன ஒரு நாள் பன்முறை பயணக்கட்டணம் அப்படியே நீடிக்கின்ற நிலையில் குறைந்தப்பட்சம் ரூ.5 அதிகப்பட்சம் ரூ.225 வரை கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.













; ?>)
; ?>)
; ?>)