விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சார்பில் தெருக்களில் பிரதிஷ்டை செய்யப் பட்ட 28 விநாயகர் சிலைகளுக்கு 5 நாட்கள் சிறப்பாக வழிபாடு நடத்தப்பட்டது.
இராஜபாளையம், தொட்டியபட்டி, சமுசிகாபுரம், சேத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வித, விதமான வண்ணங்களில், வித விதமான அளவுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து கிளம்பிய ஊர்வலம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, தெற்கு காவல் நிலையம், அம்பலபுளிபஜார், சங்கரன்கோவில் விலக்கு, போன்ற முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப் பட்டது.

மேள தாளத்துடன் உற்சாகமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ADSP கருப்பைய இராஜபாளையம் DSP பஷினா பீபி. ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜா மற்றும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், அதிரடி படையினர் என 250 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)