• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க பொறியாளருக்கு தமிழ் முறைப்படி நடந்த திருமணம் !!!

BySeenu

Aug 29, 2025

கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா பிராட் தம்பதி மகள் சாரா (30) என்பவருடன் பழகி உள்ளார்.

கடந்த 2019 – ஆம் ஆண்டு கல்லூரி பட்டம் அளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி இருவரும் கேட்டு உள்ளனர்.

மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்த நிலையில், கௌதமும் சாராவும் பட்ட மேற்படிப்பை முடித்து கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்து உள்ளனர்.

மணமகளின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் தங்களது மகளுக்கு தமிழ்நாட்டில், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர்.

இதை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை வந்தான்.

கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை திருமண சடங்குகள் நடைபெற்றன அதில் மணமகள் சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்த மணமகன் கௌதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமண விழாவில் அமெரிக்கா, கன்னடா நாட்டைச் சேர்ந்த மணமகளின், உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர்.