விநாயகர் சதுர்தி விழவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 50.க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், T. கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்டம் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து பெரியகுளம் பகுதியில் உள்ள தெருக்களில் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் மாலையில் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்பு அங்கிருந்து பெரியகுளத்தின் முக்கிய வீதிகளான அரண்மனை தெரு, வி.ஆர்.பி தெரு, மற்றும் தென்கரை சுதந்திர வீதி, அக்ரகாரம் உள்ளிட்ட வீதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வழமாக கொண்டு செல்லப்பட்டு பின்பு பெரியகுளம் பாலசுப்ரமணி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் கரைக்கும் நிகழ்சி நடைபெற்றது.
விநாயர்கர் சிலை ஊர்வலத்திற்க்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் 5 நபர்கள் 8 ஆய்வாளர்கள் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 500 மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வழத்தின் போது தேனி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.








