மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது.

சிவாச்சாரியார் செந்தில்பட்டர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் பூர்ணாஹீதி ஹோமம் உட்பட இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபா ஆராதனைகளும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இணை ஆணையர் கிருஷ்ணன்,உதவி ஆணையர் லோகநாதன் கண்காணிப்பாளர் சரவணன் பேஸ்கார் பகவதி உபயதாரர்கள் ஏ எஸ் ஆர் ஜுவல்லரி ஜானகிராமன் குடும்பத்தினர்கள் நாச்சூ ஜுவல்லரி சரவணன் வள்ளியம்மை குடும்பத்தினர்கள் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.