யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 229 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை அரசு பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் பாலமுருகன் வரவேற்றார்.
ஆலோசகர் ராகேஷ் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன்
மரங்களின் பயன்கள், மாறிவரும் காலநிலை, மேக வெடிப்பு, மேகத்தின் தண்ணீர் தாங்கும் திறன், அதிகரிக்கும் வெப்பநிலை ஆகியவை குறித்து
உரை நிகழ்த்தினார். பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு கவாத்து பணி, பராமரிப்பு பணி, களப்பணி முதலியன நடைபெற்றது.

நிகழ்விற்கு தேவையான கொய்யா, மா, பலா, நாவல் மரம், சாத்துக்குடி, அத்தி, பப்பாளி முதலிய பழ மரக்கன்றுகளை மீனாட்சி தட்டச்சு உரிமையாளர் ஜெயபாலன் வழங்கினார். திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிர மூர்த்தி தன்னம்பிக்கை மற்றும் பசுமை உரை நிகழ்த்தினார். மரக்கன்றுகள் நடப்பட்டன. நீர் ஊற்றப்பட்டது.
‘மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்’
என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, ரமேஷ், பாஸ்கரன், பரமேஸ்வரன், மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், உறுப்பினர்கள் , பசுமை சாம்பியன் அசோக்குமார், ஸ்டெல்லா மேரி, ஐஸ்வர்யா, வெண்பா, ரஞ்சனி, கபிலன், சரண், பாலாமணி, நலினா, பிரசீத் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ குடியிருப்போர் நல சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவன் ரூபன் நன்றி கூறினார்.