79வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் 77 வது வார்டு தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலும், மாநில பொருளாளர் மருத்துவ சேவை அணி அப்துல் ரஃபி, மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலையில், சுப்பிரமணியபுரம் சமுதாய கூடத்தில், 77வது வார்டு சுப்பிரமணியபுரம் கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது,

இம்முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கும், கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழி லென்ஸ் IOL பொருத்தி மீண்டும் பார்வை வழங்கப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும் கண் சம்பந்தபட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இம் முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்,