நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்றும் பசலிக்கா அந்தஸ்து பெற்றதுமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் ஆண்டு பெருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடு உட்பட பல லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். வருகிற 29 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கி
விழா நாட்கள் நடைபெறும் பத்து நாட்களும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் மராத்தி கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது செப்டம்பர் 5 ஆம் தேதி புனித சிலுவை பாதையும் ஏழாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன பெரிய தேர் பவணியும் 8 ம் தேதி மாதா பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு அன்று மாலை கொடி இறக்கம் செய்யப்பட உள்ளது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக சாரம் அமைத்து தொழிலாளர்கள் தீவிரமாக வர்ணம் பூசி வருகின்றனர் மேலும் பேராலயத்தை சுற்றிலும் மின் அலங்காரப் பணிகள், கொடி கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக கடற்கரையில் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டும் கடற்கரையொட்டி அமைந்திருந்த கற்றுக் கொட்டகை கடைகளை அகற்றிவிட்டு தகர சீட் அமைக்கப்பெற்று வருகிறது. மேலும் வரக்கூடிய லட்சக்கணக்கான யாத்திரிகர்களுக்கு தேவையான கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேராலயம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.