அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி,நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப் படுவது குறித்து கேட்டறிந்தார்.

மேலும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் 04 நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 03 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு ஆணைகளையும், 01 பயனாளிக்கு புதிய பதிவிற்கான அடையாள அட்டையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முகாமிற்கு வருகைபுரிந்த 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தன்னார் வலர்கள் சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு களையும் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இம்முகாமில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மணி வண்ணன், ஜெயங்கொண்டம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணி யாளர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.