தேனி மாவட்டம் தேவாரம், மேட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கிராம பொது மக்கள் இன்று காலையில் தேவாரம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

மூன்று மாத காலமாக தண்ணீர் வராத காரணத்தினால் கை குழந்தைகளுடன் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
பள்ளிக் குழந்தைகள், பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய குழாயினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கம்பம் – தேவாரம் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தண்ணீர் திறந்து விடுவதாக உறுதியளித்ததின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் உத்தமபாளையம், தேவாரம் உள்ளிட்ட சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.