தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாழூர் சோமன்.

72 வயது நிரம்பிய வாழூர் சோமன், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த வருவாய்த்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து காலமானார்.
வாழூர் சோமன் உடல், திருவனந்தபுரத்தில் இருந்து அவர் வசிக்கும் இடுக்கி வண்டிப்பெரியாறு அருகே வாளார்டி பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பின் வண்டிப்பெரியாறு சமூக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரளான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்குப்பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பாம்பனார் தியாகிகள் நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு வாழூர் சோமன் உடலுக்கு, அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதியஞ்சலி நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இடுக்கி ஆட்சியர் முனைவர் தினேசன் செருவட்,
மாநில அரசு சார்பில் சட்டமன்ற சபாநாயகர் ஷம்சீர், அமைச்சர்கள் ராஜன், பிரசாத், சின்சுராணி, ரோஷி அகஸ்டின், துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமார், இடுக்கி எம்.பி. டீன் குரியகோஸ், எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.