அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணா சிலைஅருகில்,மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி /எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி யினை மாவட்ட ஆட்சியர்பொ.இரத்தினசாமிகொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்றுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வுஏற்படுத்தினார்.தொடர்ந்து ,மாவட்ட அளவில் நாட்டுப்புற கலை களின் வாயிலாக எச்.ஐ.வி பரவல் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சுமார் 350 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட
இந்த விழிப்புணர்வு பேரணியானது அரியலூர் நகராட்சிப் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தொடங்கி, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் எச்.ஐ.வி பரவல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், எச்.ஐ.வி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டும் சென்றனர்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் மரு.நெடுஞ்செழியன்,வருவாய் வட்டாட்சியர் முத்துலட்சுமி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் சு.சுமதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள்,இரத்த வங்கிபணியாளர்கள், ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை மைய ஆலோசகர்கள், ஆய்வக நுட்பநர்கள், கட்டுப்பாடபள்ளி மாணவ,மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.