விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வருவாய் மற்றும் பெயரிடம் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களுக்கு இன்னும் மகளிர் உரிமை தொகை 1000 வரவில்லை என்று குற்றம் சாட்டினர், அவர்களிடம் உரிய மனு அளிக்குமாறும் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்,
அப்போது அங்கிருந்த பெண் ஒருவரிடம் இவ்வாறு காது மற்றும் கழுத்தில் நகைகள் அணிந்து வந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என அவர்களை பார்த்து கிண்டல் செய்தார் அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் அனைவரும் நகைச்சுவையுடன் சிரித்தனர், மேலும் நகைகள் கணக்கில் வந்தால் மகளிர் உரிமை தொகையானது தரப்பட மாட்டாது என அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஊமத்தம்பட்டி கிராமத்தில் அங்கவன்வாடி மையத்தை திறப்பதற்கு சென்ற அமைச்சரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி, மயான வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லை என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர். மேலும் மகளிர் உரிமைத் தொகையும் கிடைக்கப் பெறவில்லை என அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராமச்சந்திரன் உடனடியாக அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.