மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் வலையங்குளம் சந்திப்பில் இருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியும்.

இதனால் இப்பகுதி 2 நாட்களுக்கு முன்பு இருந்தே போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக தொட்டப்ப நாயக்கனுர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கருப்பசாமி மைக் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், வாகனங்கள் இடைவெளி விட்டு வரவும், பொறுமையாக வரவும், எறும்பு போல வரிசையாக சாரை சாரையாக ஒருவர்பின் ஒருவராக செல்லாமல் ஓட்டுநர்கள் கவனமாக வரவும், நெருக்கமாக பகுதி என்பதால் மெதுவாக வரவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஆம்புலன்ஸில் செல்வது யாரோ செல்கிறார்கள் என நினைக்காமல் உங்களது சொந்தம் இரத்த உறவுகள் என நினையுங்கள். ஆம்புலன்ஸில் செல்லும் நேரம் கோல்டன் ஹவர்ஸ் ஆகையால் உயிர் காக்க உதவுங்கள்.
மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். உங்களை நம்பி உங்களது குடும்பம் உள்ளது. மாநாடு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
குடும்பத்தில் இளைஞர்கள் ஆணிவேர். உங்களை நம்பிக் குடும்பம் உள்ளது. மாதா, பிதா, குரு ஆகிய மூன்று பேரையும் மதிக்க வேண்டும் வாகனங்களில் வருபவர்கள் கத்தாமல் செல்ல வேண்டும். படியில் பயணம் செய்ய வேண்டாம். படியில் பயணம் நொடியில் மரணம். மாநாட்டிற்கு வரும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்.