• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்..,

BySubeshchandrabose

Aug 21, 2025

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில்

சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது திருக்கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்கள் வம்சாவளியினராக உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலை துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோவிலில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வேள்வியாகங்கள் அமைக்கப்பட்டு ஆலய கருவறைகள் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தில் இன்று காலை 8.15 மணியளவில் கோவில் உள்ள கோபுர மற்றும் கருவறை விமான கலசங்களுக்கு புனித யாகசாலை வேள்வி நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கருவறையில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு தீபாராதனைகள் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.