• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!!

ByVasanth Siddharthan

Aug 21, 2025

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செந்துறை ரோடு செட்டியார்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த கண்ணன் மகன் செல்வபிரகாஷ்(23), சாகுல்சையதுமீரான் மகன் அஜித்மீரான்(28), மோகன் மகன் பிரவீன்குமார்(24),

அக்பர் மகன் ஆஷிக் (எ) வெள்ளை(25), சின்னு மகன் விஷ்ணு(23), உயிர் முகமது மகன் முகமதுமஸ்தான்(24), மாரிமுத்து மகன் பிரகாஷ்ராஜ்(21), தேனியை சேர்ந்த ராஜு மகன் ஆகாஷ்(23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.