• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பி.மகாதேவன்பிள்ளையின் நூற்றாண்டு விழா..,

நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் மகாதேவன் பிள்ளை. பள்ளிப்படிப்பை உள்ளூரிலும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலும்,பட்டப்படிப்பை, சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். இவரது தந்தை மிகுந்த தேசப் பற்று மிக்கவர்.

சீன யுத்தத்தின் போது, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவிப்பை தொடர்ந்து. இந்தியாவின் எட்டு திக்குகளிலும் இருந்து நாட்டு மக்களிடம் இருந்து அரசே நேரடியாக நன்கொடைகளை கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தது போன்ற ஒரு கூட்டம் நாகர்கோவில் அரசு அலுவலகர்களின் முன்னிலையில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற இளைஞர் மகாதேவன் பிள்ளை.கூட்ட நிர்வாகிகள் மக்களிடம் நன்கொடை பெற்று ஒவ்வொருவரிடமும் வந்தனர். மகாதேவன் பிள்ளையிடம் நன்கொடை வசூலப்பவர் வந்த போது தேசத்தை உயிராக நேசிக்கும் தந்தையின் மகனான மகாதேவன் பிள்ளை, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5_பவுன் தங்க செயின், விரலில் அணிந்திருந்த 1_பவுன் மோதிரம் என 6_ பவுன் நகையை இந்தியாவின் இராணுவத்திற்கு அன்பளிப்பாக கொடுத்தவர்.

இளைஞர் மகாதேவன் பிள்ளை யின் இந்த செயல் செய்தியாக அடுத்த நாள் செய்திதாள்களில் வெளியானது. தேசப்பற்று மிக்க இவர் காங்கிரஸ் கட்சியில் பயணித்தார்.குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இவர் இருந்த போதுதான்.

தமிழக சட்டமன்றத்திற்கு 1967 ல் பொதுத்தேர்தல் வந்தது. காமராஜர் பரிந்துரையில் கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இவரை எதிர்த்து அன்றைய திமுக கூட்டணி கட்சியான, சுதந்திர கட்சியை சேர்ந்த முத்துகருப்ப பிள்ளை போட்டியிட்டார். இருவருமே வழக்கறிஞர்கள்.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில். 1967 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்,அதுவரை ஆட்சி கட்டிலில் இருந்த காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு முதல் முறையாக மாநில கட்சியான திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும். குமரியில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. கன்னியாகுமரியில் மகாதேவன் பிள்ளை வெற்றி பெற்றார்.

அண்ணாவின் தலைமையில் அமைந்த முதல் திமுக ஆட்சியில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்வி முதல்வர் அண்ணாவையே ஈர்த்தது.

சட்டமன்ற கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாவற்றிற்கும் தமிழ் தமிழ் என கோசம் எழுப்பிய நேரத்தில். மகாதேவன் பிள்ளை சபாநாயகரை நோக்கி எல்லாவற்றிற்கும் தமிழ் என கோசம் இடுகிறீர்கள். மைக்கை ‘முண்டக்கூவி’ என சொல்வீர்களா என்று கேள்வி எழுப்பிப்பியதை பார்த்த முதல்வர் அண்ணா அந்த நொடியே அவையில் எழும்பி சொன்ன பாராட்டு. தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் மகாதேவன் பிள்ளையின் கருத்தை நான் வெகுவாக மனம் திறந்து பாராட்டுகிறேன் என தெரிவத்த போதும் அவையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் மேஜையை தட்டி பாராட்டியது. நூற்றாண்டு நிகழ்வில், இன்றைய அதிமுகவை சேர்ந்த ஒருவர் நினைவுகூறினார்.

குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1967_ தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கடைசி வேட்பாளரும் இவர் தான். அதற்கு பின் நடந்த பெரும் பான்மை தேர்தல்களில் கூட்டணி என்ற நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து கன்னியாகுமரியில் போட்டியிடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி இரண்டாக. நிஜலிங்கப்பா தலைமை,ஜகஜீவன்ராம தலைமை என இரு அணிகளாக பிரிந்த காலத்தில். தமிழகத்தில் நிஜலிங்கப்பா தலைமையில் இருந்த பழைய காங்கிரஸ் வலிமை பெற்றதாக திகழ்ந்தது.

காமராஜர் மறைவுக்கு பின், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் பழ. நெடுமாறன் முயற்சியில் தமிழக காங்கிரஸ் அன்றைய இந்திரா காங்கிரஸ் உடன் இணையும் முயற்சியின் போது இணைந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மகாதேவன் பிள்ளை.

பெரும் தலைவர் காமராஜரின் பேரன் பை பெற்றவர் மகாதேவன் பிள்ளை. காமராஜர் 1969 நாகர்கோவில் இடைத்தேர்தல்,1971 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காலங்களில் பண பொறுப்பாளராக இருந்தது மட்டும் அல்ல. இரண்டு தேர்தல் காலங்களின் சிலவை. இவரது உடன் பிறந்ந்தவர் ஒரு தணிக்கையாளர்.

அனைத்து வரவு, செலவுகளும் தணிக்கை செய்து பெரியவரிடம் மகாதேவன் பிள்ளை மற்றும் அன்றைய குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் இஸ்மாயில் சாகிப்பும் இணைந்து சென்று பெரும் தலைவர் காமராஜரிடம் கொடுத்த போது பெரியவர் இவரை பார்த்து சொன்ன பதில். ‘பிள்ளை’ உங்களிடம் யார் கேட்டார்கள் இந்த கணக்குகளை என்று உச்சரித்த வார்த்தை மகாதோவன் பிள்ளையின் நேர்மையின் அடையாளம்.

குமரி ஒரு காங்கிரஸ் மாவட்டமாக இருக்கும் நிலையில். குமரியின் புகழ் மனிதனாக காங்கிரஸ்யில் பயணித்த பெரும் தலைவர் காமராஜரின் அன்பை பெற்ற மகாதேவன் பிள்ளையின் 100_ஆண்டு விழா காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தாத நிலையில்.

கன்னியாகுமரி மாவட்ட வ.உ.சி தேசியப் பேரவையின் சார்பில், இந்த அமைப்பின் தலைவர் தியாகி கோ. முத்துக்கருப்பன் முயற்சியில் நடை பெற்றது பாராட்டத்தக்கது என்றாலும்,

மகாதேவன் பிள்ளை அவரது வாழ்க்கை முழுவதும் பயணித்த ஒரு இயக்கத்தின் தமிழக காங்கிரஸ் தலைவராக பயணித்த ஒரு காமராஜரின் தொண்டருக்கான உரிய மரியாதையை, பாராட்டு விழாவாவை குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாட வேண்டும் என்பதே காங்கிரஸ் கார்களின் எண்ணமாக இருக்கிறது.

வ.உ.சி தேசிய பேரவை நடத்திய மகாதேவன் பிள்ளை நூற்றாண்டு விழாவில் அவரது மகன் மருத்துவர் பகவதி பெருமாள், குடும்பத்தார். நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், இன்றைய முதல்வர், குறளக நிறுவனர்
தமிழ்க் குழவி.விசுவநாதன், வழக்கறிஞர் இராஜகோபால், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் ராஜன், பல்வேறு சமூதாயம் அமைப்பினர் என
பல்வேறு அமைப்பினரும் குமரி மண்ணின் மைந்தர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு விழாவை. அவர்களது இல்லத்தின் விழா என்ற உணர்வில் பங்கேற்றார்கள்.