• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

என்னுடைய நாடும்,தமிழ்நாடும் முக்கியம்..,

ByPrabhu Sekar

Aug 19, 2025

எங்கள் கூட்டாளி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் குடியரசு துணை தலைவருக்கான ஆதரவு குறித்து தெரிவிப்பேன் கமலஹாசன் எம்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எம் பி டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

நண்பர் எம்பி டி ஆர் பாலுவிற்கு இரங்கல் செய்தி சொல்வது என் நட்புக்கான கடமை,

நான் தமிழ்நாட்டில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சென்றது தமிழகர்களுக்கு என்னென்ன பயன்கள் உள்ளதோ அதை கொண்டு வருவதற்கும் கிடைக்கவில்லை என்றால் அது ஏன் எங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்பதற்கும் சென்றுள்ளேன்,

என்னுடைய நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம், தமிழ்நாட்டை மனதில் கொண்டிருப்பவர்கள் யார் என்று பார்த்து குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

எங்கள் கூட்டணியில் பல ஆளுமை இருக்கின்றது. எனக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான ஆளுமை யார் என்று பார்த்தால் தமிழ்நாடு முதல்வர் தான் அவர்தான் எங்களுடைய கூட்டாளி அவருடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் யாரை ஆதரிப்போம் என்று பதிலை கூற முடியும்,