கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12.07.2025 அன்று ஜெயன் (50) என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று கொண்டு இருந்த போது அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனீஷ் (22), விஷ்ணு (31) மற்றும் ஜோசப் (27) ஆகியோர்கள் ஜெயன் என்பவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்து உள்ளனர்.

இந்நிலையில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவின் படி வழிப் பறி வழக்கு குற்றவாளிகளான மனீஷ் (22), விஷ்ணு (31) மற்றும் ஜோசப்(27) ஆகிய மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததற்கு அந்த நகலை சிறையில் இருந்து அவர்களிடம் காவல் துறையினர் வழங்கினர்.
